ஒரு துளி கவிதை
என்ன தான் கணினி வந்தாலும்
என்ன தான் உடனுக்குடன் குறுஞ்செய்தி அனுப்பினாலும்
ஏனோ பேனாக்கள் மீது மீளா காதல்
வெள்ளை காகிதத்தை ஒரு முறை ஆசையுடன் தடவி
அதில் பேனா கொண்டு கொஞ்சுகையில்
வந்து நாசி துளைக்கும் மையின் வாசனையில்
கொஞ்சம் சொக்கித்தான் போகிறது
என் சிந்தனைகள்
காகிதம் முழுதும் சிந்தனைகளை தெளித்த பின்
அந்த எழுத்துக்களை தடவி பார்க்கும் சுகம்
தூங்கும் குழந்தையின்
உறக்கம் கலைக்காமல்
தாய் குழந்தையை தீண்டி பார்த்து
ரசிக்கும் உணர்வு
யாருக்கு நன்றி பாரட்ட நான்
தன்னை அர்பணித்த காகிதமா?
உளி ஆகி நிற்கும் பேனாவா?
சிந்தனைக்கு உயிரூட்டிய மொழியா?
விடை தெரியவில்லை
இருந்தும் ஒரு துளி கவிதை......