எல்லைக் கோடு
எல்லையில் பிரிவுகள் எத்திக்கும் துயரங்கள்
எல்லையின் கோட்டை எதிரிகள் தாக்க
இந்தியப் பெருமையின் இன்பமும் அழியும் .
இந்திய மண்ணை இடிப்போர் தம்மை
எந்த நாட்டவரும் ஏற்க மாட்டார் .
நாடுக ளிடையே நல்லுணர்வு இல்லை .
வீடுகள் தோறும் விரிசலே தங்கும்.
இத்தனைப் பூசல்கள் இத்தனைப் பிணக்கு .
சுத்தமாய் எல்லையின் சுகத்தைக் கெடுக்கும் .
இத்தகைப் பிணக்குகள் இனியும் வளர்ந்தால்
மொத்தமாய் எல்லையின் மகிழ்ச்சியைக் கெடுக்கும் .
கார்கில் போரில் மடிந்தோர் பலராம்
காலம் அவர்கள் கதையைச் சொல்லும் .
கோடுகள் எல்லாம் கோலமாய் மாறி
வாடும் மக்களின் வருத்தம் தீர்ப்போம் .