அரும்புகள்

மழலைப் பூக்களின் அரும்புகள்
தாய் தந்தை முத்தங்கள்

மழைப் பூக்களின் அரும்புகள்
கார் மேகக் கலவிகள்

முத்தப் பூக்களின் அரும்புகள்
இதழ் கூடும் பொழுதுகள்

யுத்தப் பூக்களின் அரும்புகள்
இரக்கமற்ற இதயங்கள்

கனவுப் பூக்களின் அரும்புகள்
கண் தூங்கும் இரவுகள்

காதல் பூக்களின் அரும்புகள்
கண்விழிப் பார்வைகள்

கவிதைப் பூக்களின் அரும்புகள்
என் தனிமையின் சிந்தைகள்

என் கண்ணீர் பூக்களின் அரும்புகள்
அவள் நினைவு வரும் பொழுதுகள்

எழுதியவர் : மணி அமரன் (14-Nov-15, 11:11 pm)
Tanglish : arumpukal
பார்வை : 212

மேலே