காதல் பிச்சை

குளிருக்கு இதமாக
பட்டினால் நெய்த போர்வையை
உன்னிடம் கேட்கவில்லை ....

குளிர் சாதன வசதி அறையில்
வகை வகையான சுவை நிறைந்த
உணவு பதார்த்தங்களை
வாங்கி தர உன்னிடம் கேட்கவில்லை...

இரு சக்கர வாகனமோ
நான்கு சக்கர வாகனமோ
ஏதோ ஒன்றில் என்னை அழைத்து செல்ல
உன்னை அழைக்கவில்லை....

வண்ண வண்ணமாக
காண்போர் விழிகளை
கொள்ளை கொள்ளும் விதமான
பகட்டான ஆடை ரகங்களை
உன்னிடம் இருந்து விரும்பவில்லை....

ஒன்றே ஒன்று மட்டுமே உன்னிடமிருந்து
கனிவான, பாசமான, அன்பான,
இதமான, இனிமையான வார்த்தைகள்
மட்டுமே எனக்கு
நீ தந்தால் போதும்
தருவாயா??
பிச்சை பாத்திரம் ஏந்தாமலே
அன்பு பிச்சை கேட்கிறேன் உன்னிடம்...
பாராமுகம் காட்டாதே என்னிடம்....

எழுதியவர் : சாந்தி ராஜி (14-Nov-15, 11:13 pm)
Tanglish : kaadhal pitchai
பார்வை : 339

மேலே