அரும்புகள்

ஒரு சொட்டுத்துளி..!
அவள் வயிற்றுக்குள்ளே..!
யுகம் கண்டது அரும்புகளாய்..

பட்டதொரு துளிதான்
சில தினங்களில்..
உதிரம் கண்டது
சற்று நாளும் தொடர..
தசை கண்டது
தசை விருட்சமாகி
உயிர் கொண்டது...

இருளுக்குள் முடங்கியே..!
இரையுண்டது..
இரவும் பகலுமாய்
வளருன்டது..
இதயத் துடிப்பினிலே..!
அதன் நிலை கண்டது..
ஈறாறு மாதங்களில்..
நிறை கொண்டது.

நாளும் பொழுதுமாய்
துடித்தது..தாயோடு..
சண்டையிட்டு மகிழ்ந்தது
தான் காணும் உலகமாய்
நினைத்தது..தரணியொன்று
இருப்பதை மறந்தது..

இருன்ட உலகுக்குள்ளே..!
மிகுந்த கற்பனையில்
மிதந்திருந்த அரும்புக்கு
விடிந்தது ஒரு தினம்..

விழித்துப்பார்த்தது..
விரிவான உலகம்..
மெல்லிய காற்று..
மனிதனின் நடமாட்டம்..
பறவைகள் கீச்சிடும் சப்தம்..
பக்கத்தில் படுத்துறங்கும் அன்னை
சுவையான பானம்
அனைத்துமே..! அதிசயம்..

ஆனந்தம் மேலிட்டு
அழத்துவங்கியது..
உள்ளமும் கண்களும்.
உலகத்தை ரசித்தது..
பேச முடியாமல் தவித்தது.

தரணியே..! தனக்கென்று
நினைத்தது தாயவளின்
அன்பிலே..! சிரித்தது..
தாலாட்டுப்பாட்டிலே..!
தலை சாய்த்துறங்கியது..

பார்ப்பவர் கண்களை கவர்ந்தது..
பாசத்தால் உலகையே..! வென்றது..
இதயத்தை பரித்துக்கொன்றது..
இறைவனின் படைப்பிலே உயர்ந்தது.

பார்வையோ..! குறும்பு..
புன்னகையோ..! மத்தாப்பு..
உடல் அசைவுகளோ..! பூரிப்பு..
இதயத்திலோ..! சிரிப்பு..
உள்ளமெல்லாம் வெளுப்பு..
ஆதலால்தான் அது அரும்புகள்..

எழுதியவர் : அபூ நசீர் (16-Nov-15, 5:06 am)
Tanglish : arumpukal
பார்வை : 123

சிறந்த கவிதைகள்

மேலே