வெட்கமில்லையா வெட்டிபயலே
வெட்கமில்லையா ! வெட்டிபயலே...
(ஒரு பெண்ணின் ஆதங்கம்)
வெட்கமில்லையா ! வெட்டிபயலே
என் காலையே விதைத்து
மாலையே அறுத்து
இரவில் என்னோடு உறங்குகிறாய் காவலுக்கு
உன்னை வெளியில் நிறுத்தி கதவடிக்க கூட
தாழ்பால் இல்லாமல் தயங்குகிறேன்
சாமத்தில் ஒதிங்கினால் கூட
சதிகாரன் நீ அங்கும் நிற்கிறாய்
நிலவு தூங்கும் நேரத்தில் நான் விழித்தாலும்
உடன் நடக்கிறாய் கணம் கடகிறாய் என்னையே..
வெட்கமில்லையா...
ஏந்தி ஏந்தி நான் கேட்ட வரங்கள்
கரைந்தே போயின அவன் காலடியில்
விழிகள் கூசும் ஒளிகள் பொருந்திய அழகில் வேண்டினேன் ஆணை
ஆனால் பின்னால் சுற்றும் நீயோ..
ஒளிகள் செத்த திரியாய் தெரிகிறாய் - இவ்வாறு
மறந்தேன் உன்னை என் மதில் இருந்தே
இருந்தாலும் என்னை சுற்றுகிறாயே
வெட்கமில்லையா...
ஏற்றி வைத்த மெழுகாய் நான் எறிந்தாலும்
சூட்டில் உருகும் மெழுகாய் அருகில் அடியில் நிற்கிறியே...
என் ஒவ்வொரு நடைக்கும்
உன் தலைக்கு குறி வைத்து மிதிதேனே
மீண்டும் என்னை தடவி கொண்டே நடக்கிறாயே...
வெட்கமில்லையா..
அந்தி தென்றல் ஆற்று நீரை குடிக்கும் வேளையில்
சேற்றில் ஊன்றிய ஒற்றை காலும்
நீரில் தரை இறங்க மற்ற காலும்
ஆழம் தேடும் மை விழிகளும்
முழுக துடிக்கும் தலைத்தோகைகளும்
வேண்டி தலை இறக்க
தேடி வந்து என்னோடு தலை நனைக்கிறாயே..
வெட்கமில்லையா..
உன்னை மறந்தேன்
உன்னிடமிருந்து என் ரகசியத்தை மறைக்க மறந்தேன்.
நிலவோடு நின்று பேசின ரகசியம்,
ஆருயிர் தோழியிடம் பேசிய அன்றாட ரகசியம்,
நான் மறந்த ரகசியம், மறைத்த ரகசியம்
எல்லாம் ஒட்டி இருந்து உறிந்தாய்.
அய்யோ....... மௌனத்தை மறந்தேன்
மௌனத்தில் பேசி இருக்கலாமே என்றாலும்
மௌனம் கேட்குமா மைல்கள் கடந்த நிலா
என் கண்ணை புரிவளோ என் தோழி
அதிலும் தோற்றேன் - ஆனால் நீ...
இருளோடு மறைந்து என் ரகசியத்தை
வெளிச்சமாய் கேட்டு கொண்டாயே
வெட்கமில்லையா..
போதும்... போதும்... போதும்...
அண்டை மொழி அடகு வாங்கி
ஆயிரம் வார்ததைகளில் உன்னை வஞ்சி விட்டேன்
பெய்த மழையும் நின்று விட்டது
காய்ந்த என் வாழ்க்கையில் வசந்தம் தொடங்கி விட்டது
ஆகையால்..
நிழலே நீங்கி இரு
நிரந்தர கணவன் வந்து விட்டான்.
- அந்தோணிசாமி