கடைப்பிடிப்பீர் இளைய சமூகமே
பொழுது விடியும் முன்னெழுக
புழுதிப் பறக்க ஓடிடுக
குளிர்ந்த நீரில் குளித்திடுக
குல தெய்வத்தை வணங்கிடுக
காலை உணவு புசித்திடுக
கடமை யாற்றப் புறப்படுக
அறிவு சிறக்கப் படித்திடுக
ஆசிரியரை என்றும் மதித்திடுக
கண்ணீர் துடைக்கப் பழகிடுக
கனிதரும் மரமாய் வளர்ந்திடுக
காந்தி வழி நடந்திடுக
கர்ணன் புகழ் பாடிடுக
காலம் தவறாது உழைத்திடுக
கருப்புப் பணத்தை ஒழித்திடுக
பாவங்கள் செய்வதை நிருத்திடுக
பாரதி தமிழை போற்றிடுக
ஆபத்து காலத்தில் உதவிடுக
அப்துல்கலாம் கனவை நினைவாக்கிடுக
அகிலம் செழிக்க மரம்நடுக
அத்திமரம் போல் இனித்திடுக
ஏளனம் செய்வதை மறந்திடுக
ஏழைக்கு உதவ நினைத்திடுக
சாலை விதியின் துணையோடு
சமூக நலன் காத்திடுக

