அரும்புகள் நிறுவன ஆண்டு நிறைவு விழாப் போட்டிக்கு
*****************
அரும்புகள்!
*****************
தம்பி தங்கைகளே! - மின்னும்
தங்கக் கம்பிகளே! - இந்த
அண்ணன் கூறுவதை - மனதில்
அழகாய்க் கேளுங்களேன்!
பாமரர் நிறைந்த தேசம்! - இது
பாட்டாளி நிறைந்த தேசம்! - தினம்
பஞ்சத்திலும் வஞ்சத்திலும் - சிக்கிப்
பரிதாபம் நிறைந்த தேசம்!
உங்கள் வயதினிலே
ஊருக்குள் பலபேரு
ஆடுமாடு மேய்ப்பதை
அறிந்துநீங்கள் படிக்கணும்!
அவர்க்கில்லா வசதியெல்லாம்
அனுபவித்துப் படிக்கும்நீங்கள்
அவர்களையும் மதிக்கணும்!
அவர்களுக்கும் படிக்கணும்!
நீங்கள்
படிக்கும் பாடமெல்லாம் பாமரர்க்கு உதவணும்!
எடுக்கும் காரியங்கள் ஏழைகளுக் குதவணும்!
நடத்தும் தொழிலெல்லாம் நாட்டுக்கும் உதவணும்! - நீங்கள்
கடக்கும் மனிதரெல்லாம் கையெடுத்து வணங்கணும்!
உயர்ந்துவிட்டோம் என்றுயாரும் உட்கார வேண்டாமே! - இன்னும்
உயர்ந்ததென்று உனதுநாட்டை ஒருவர்சொல்லக் காணோமே!
என்னபாடு பட்டுமிந்த இழிநிலையை மாற்றடா! - நீ
இந்தியச் சராசரிக்கு ஏழுபடி மேலடா!
*********************************************************************************************************
- இது எனது சொந்தப் படைப்பே என்று உறுதி கூறுகிறேன்!
- ராஜமாணிக்கம்.