உரிமைகள் பறிக்கப்படும்

உரிமைகள் பறிக்கப்படும்

கொத்து கொத்தா சொந்தம் வந்து
கூடி நின்னு பாத்துகிட்டு
எத்தனையோ வார்த்தை சொல்லி
சிரிக்கவைக்க பார்க்கும்போதும்

நிக்காத அழுகையப் பாராட்டி
அத்தனபேரும் பேசிவைக்க
அம்மாவும் கொஞ்சமா சிரிச்சு வைச்சா

அவரமாதிரி இவரமாதிரின்னு
அடையாளம் தேடிவைக்க
ஆளாளுக்கு வைத்தியரா
அப்பவே மாறிநிக்க

வந்ததெல்லாம் சொன்னதென்னவோ
ஒரு வார்த்தைதான்
அடியே இனி உந்தம்பிதான் செல்லம்
உனக்கில்லயின்னு

அப்படியே உறைஞ்சிடுவேன்னு
நினைச்சாங்களோ - நான்
நீட்டுன விரல தம்பி பிடிச்சான்
இப்பச் சொன்னேன் - பரவாயில்ல
என் தம்பிதான இருக்கட்டும்னு
அப்பச் சிரிச்சான்பாரு - அத்தன
பேரும் வாயடைக்க..

எழுதியவர் : அ. சார்லி கிருபாகரன் (16-Nov-15, 1:48 pm)
பார்வை : 109

மேலே