நாணயம்
துளிரைக்கிள்ளியவள் -இளம்
துளிர்களைக்காக்கின்றாள்
குளிரைத்தாங்கியவள் -வளம்
பெற வைக்கின்றாள்
அஞ்சுகமே இவள் நெஞ்சில் உள்ளதை கேட்பாயோ ?
நாணயமான வாழ்வினிலே
நாணயம் குடியேறியது
நாடாய் அலைந்தும் நல்வாழ்வைத் துலைக்கின்றான்
நூறு ரூபாய் ஒற்றைதாழுக்காக -ஏழை உடலை
சாறாய்ப் புழிகின்றான்
நிறை கலசத்துக்குள்
நிறைவேறா ஆசைகள் நிறைகின்றது
சந்திர வட்டக்கல் ,தாது கோபுரமும்
வாடை கம கமக்க கமலம் விரிந்து நிற்கின்றது
இந்திரன் வாழும் இடமாய்
மந்திர மளிகையாகிறது
சாதி வீட்டான் தோட்டமென்று மலர்கள் பூப்பதில்லை
எதிரி வீட்டுப்பூவென்று
வண்ணாத்துப்பூச்சிகள் பார்ப்பதில்லை
கடல் தொழிலாளியின் கையில் கிடைத்த காசு -நாளை
கடவுளின் காணிக்கை யாகிறது
மனிதகுலத்தில் மட்டும் இத்தனை பிரிவுகளோ
புனிதனாய் மனிதன் வாழ நினைத்தால்
சமுகம் அவனை அழுத்திப்பிடிக்கின்றது
தடைகளை தாண்டி எழுந்தால்
கடவுளாய் நினைக்கின்றது...