அனாதை அரும்புகள்
ஊண்பசி கொண்டும்-கொஞ்சம்
உணர்வுப்பசி கொண்டும்-
தப்பும் தவறுமாய்
எங்கோ ஈருயிர்கள்
உண்டு எழுந்த
பருவப்பந்தியில்-
இலை விட்டு
சிதறி விழுந்த பருக்கைகள்-சற்றே
முளை விட்டு வளர்ந்தன-
அனாதைகள் எனும்
அடையாளத்தோடு!!! - அதனால்
பிறப்பின் ரகசியம்
எதுவெண்றறியா இப்பிஞ்சுகளை-
எச்சிலென்று
வெறுத்து ஒதுக்கும் முன்-
அவ்வெச்சில் துப்பிய
ஆணுறுப்புக்களை-
அறுத்து ஒதுக்குதலே- நியாயம்!!!