மழை அழகா , நீ அழகா
தொடர் தொடர்ச்சியாய்
அடித்து துவைத்த மழையினை
துளியும் பொருட்படுத்தாது
துவைத்து மடித்த துணியினை உடுத்தி
வானம்விட்டிறங்கிய மழைத்துளிகளாய்
கூடமெட்டியிருந்தனர் மக்கள் ..
ஆங்கே அழகாய் காணும் யாவர்க்கும்
அழகே அழகாய் ஆகிடத்துடிக்கும்
அம்சங்கள் நிறை நின் அழகம்சங்களை
அங்கே வந்த அழகானவர்க்கெல்லாம்
பொருத்திப்பொருத்தி பார்த்து
பொழில் எழிலில் பூரித்தவளாய்
உள்ளூர சிரித்து சிரித்து சிலாகித்து
பொருத்திப்பார்க்கும் பழக்கத்தை ஏனோ
நிறுத்திப்பார்த்திட இயலாமல் நான் ........