மழை

மழை பற்றிய கவிதை..!!

௮ப்படி யாரை காதலித்தாய் ஏன் இப்படி அழுகிறாய்

ரெயினும், ஒயினும்..அதிகமானா..தள்ளாட்டம்தான்..!

மலை மலையாய் “மழை” பெய்தாலும் சேமிப்பு என்னமோ குழந்தையின் 10 நொடி சிறுநீர் கணக்காய் தான் இருக்கும்...- தமிழ்நாடு

இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும். - ரமணன். அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் குடை எடுத்து செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். - தமிழக அரசு.

நான் இலவசமாக வருகிறேன் என்பதால் என்னை யாரும் சேகரிக்க மாட்டீர்கள் அதனால் உங்களுக்குதான் நஷ்டம்

தூறினாலும் தூற்றுகிறார்கள்தூறாவிடினும் தூற்றுகிறார்கள்

அணைகளில் தண்ணி ஏறும்..!சென்னை மட்டும் தனியா நாறும்...!!

நீயும் உணர்ந்து விட்டாயோ கண்ணீர்தான் காதலில் மிச்சம் என்பதை

சாலை அமைப்பதில் ஊழல் நடந்துள்ளது என்பதை காட்டதான் நீ பூமி வந்தாயோ மழையே...

உன்னை ரசிக்க தெரிந்தவர்களுக்கு, சேமிக்க தெரியவில்லை..

மழையே நீ ஞாற்றுக்கிழமை பெய்தால் அது பிழையே......

வானம் மேக மூட்டத்துடன்காணப்படும்,ரமணன் சொல்லி முடிக்கும்போது..மாணவர்களின் முகம் மகிழ்ச்சி மூட்டத்துடன் காணப்படும்.

மழை பெய்வது துளி துளியாய்...நனைந்தால் வரும் சளி சளியாய்...!!!

தன் இருப்பிடத்தை ஆக்கரமித்து கட்டிங்கள் கட்டியதால்,சாலை இறங்கி மறியல் செய்கிறதுமழைநீர்...!

மழையெ நீ ஒருநாள் மட்டும் பெய்தால் இளவரசிபல நாளாக பெய்தால் கொலையரசி

அளவோடு வந்தால் தங்க மாரி அளவுக்கு மிஞ்சினால் டெங்கு மாரி

மழை நின்ற பின்பும்.. தூரல் நிற்கவில்லை.. மரத்தடியில் நான்.. இதற்காகவே மரம் வளர்ப்போம்...


தீபாவளி விடுமுறை போதாதென்று வேண்டிய பள்ளிக் குழந்தைகளுக்காக மனமிறங்கி மழை பொழிந்தது மேகம்.

கவிதையாய் வருது மழை., யாரும் ரசிக்காததால் சாக்கடையோடு கலந்தோடுகிறது.

மழையே எங்கேயாவது போய் தொலை.. இதுவே தற்போது எங்கள் நிலை...

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (17-Nov-15, 4:23 pm)
சேர்த்தது : பகவதி லட்சுமி
Tanglish : mazhai
பார்வை : 590

மேலே