சர்வதேசமே

சர்வதேசமே
இவ்வளவு காலம்
நீ எங்கே மறைந்து இருந்தாய்?
உன் கண்கள்
மங்கிப்போயிருந்ததா?
உன் நாவு கட்டப் பட்டிருந்ததா?

அன்று
சில வெறியர்களால்
என் இனமே படுகொலை
செய்யப்பட்டதே
லட்சக் கணக்கில் என் மக்கள்
மாண்டார்களே

பெண்கள் தெருக்களில் கற்பழிக்கப்பட்டார்களே
கைக்குழந்தை என்று கூட பாராமல் கை பொம்மையாய்
தூக்கி எறிந்தார்களே

ஐயோ !
நூறு, ஆயிரம் அல்ல
ஈழத் தமிழர்கள் லட்ச லட்சமாய்
கொல்லப்பட்டார்களே,

சர்வதேசமே
நீ ஏன் அன்று
எமக்காக குரல் கொடுக்கவில்லை?
இன்று நூற்றுக்கணக்கான
உயிருக்காக குரல் கொடுக்கிறாய், பாரிஸ், சிரியாவுக்காக கதறுகிறாய்
சர்வதேசமே நீயும் சுயநலவாதிதான்,

" பாரிஸ் " " சிரியா "
உன் மக்கள் உனக்கு மக்கள்
என் ஈழத்து மக்கள்
உனக்கு மாக்களோ ?

தமிழா நீயுமா
மறந்துவிட்டாய் !
முகநூலில் முகங்களை
மாற்றிக் கொண்டு திரிகிறாயே

ஒரு தலைவனும் வரவில்லை
எந்த உலக நாடுகளும் கைக்கொடுக்கவில்லை
அன்று ஒரு இனமே அழிந்துக் கொண்டிருந்தது
அதை உலகமே வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்தது

தமிழன்
இன்று எவன் எவனுக்கோ
மன்றாடுகிறான்
பாவம் ,
தமிழனுக்காக மன்றாட
ஒருவனும் இல்லை அன்று
இருக்கவும் இல்லை

சர்வதேசமே
நீ அன்று குரல் கொடுத்திருந்தால்
ஈழத்தை நாம் இழந்திருக்க மாட்டோமே
நாடற்ற நாடோடிகளாய் சுற்றி திரிய மாட்டோமே.

சர்வதேசமே அனுபவி
பாலஸ்தீணா , சிரியா
ஈராக் , பாரிஸ்
இங்கு நேர்ந்ததெல்லாம்
இறைவன் உனக்கு கொடுத்த தண்டனை .

இப்படிக்கு
" அ .ஏனோக் நெஹும் "
Create by - Enoch Nechum

எழுதியவர் : ஏனோக் நெஹும் (17-Nov-15, 5:51 pm)
பார்வை : 430

மேலே