ஒரு ரசிகையின் ராகம்

(வால்ட் விட்மனுக்கு லண்டனிலிருந்து ஒரு பரம ரசிகை எழுதிய காதல் கடிதத்தின் கவியாக்கம்)
*****
நிர்வாணமாய் எழுதும்
என் மனக்கவிஞனே
உன்னைப்போல்தான்
என் ஆசைகளும்
நிர்வாணமாய்...
முழு நிர்வாணமாய்...
*
தூய்மையான
என் கருப்பை
காத்திருக்கிறது
உன் குழந்தைக்காக
உலகின்
தலைசிறந்த அந்தப் புதையலை
தாங்கள் எனக்குத்
தரும் வரை
தேவதைகள் காத்திருப்பார்கள்
என் கருவறையின்
தலைவாயிலை
*
நம் மகன்
ஆம்
நம் மகன்
நீங்கள் அவனை
நேசிக்கவில்லையா ?
*
வெட்ட வெளியில்
ஒரு குன்றின் உச்சியில்
அவனை நான்
பெற்றெடுக்கவேண்டும்
அவனுக்காக
என் மனக்கவிஞனே
தூய்மையான
என் கருப்பை
காத்திருக்கிறது (1990)
***
என் ("காதலின் பொன் வீதியில்" நூலிலிருந்து )