மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும் விழிக்கிறேன்
விடிகிறப் பொழுது நல்லதாய் இருக்குமென ,,
ஆனால் இன்னும் விடியலே இல்லை எங்களுக்கு ....
இங்கே தினம் தினம் திபாவளி தான் ,,
ஆனால் அரக்கர்களுக்கு பதில் அப்பாவிகள் கொல்லபடுவர் ...
எம் குழந்தைகள் நடக்கப் பழகியவுடன் ,,
பதுங்கு குழியில் பதுங்கவும் பழகிகொள்கின்றன ...
இங்கே பள்ளிகூடங்கள் குறைவு,,
பயிற்சிக்கூடங்கள் அதிகம்...
இங்கே மருத்துவமனைகள் குறைவு ,,
இடுகாடுகள் அதிகம்..
இங்கே உயிருடன் இருப்பவர்கள்,, வாழ்கிறவர்கள் என்று அர்த்தம் அல்ல ,,
வாழ்க்கையை தேடுகிறவர்கள் ...
இங்கே அமைதிப்படை வந்து ,,
எங்கள் அமைதியை குலைக்கும் ...
அமைதியை விரும்புகிறவர்கள் இங்கே வரவேண்டாம் ,,
ஆம் நம்புங்கள் இது '' புத்த பூமி "..
மீண்டும் மீண்டும் விழிக்கிறேன்
விடிகிறப் பொழுது நல்லதாய் இருக்குமென ......