மல்லிகை பூ சார் மனைவிக்கு வாங்கிட்டுப் போறேன்…

கடைசி வரியை படிக்காம விட்டுப்புடாதீய
அப்புறம் வருத்தப்படுவீய.
------------
கையில் என்ன ‌பொட்டலம்?”

“மல்லிகை பூ சார்! மனைவிக்கு வாங்கிட்டுப் போறேன்…!”

“அவ்வளவு பிரியமா உங்களுக்கு?”

“ஆமா சார்… என்னுடைய வெற்றிக்கெல்லாம் அவதா‌னே காரணம்!”
“உங்க வெற்றிக்கு மட்டுமா… ‌
அமேரிக்க அதிபராக இருந்த ஆன்ட்ரூ ஜாக்சன்- கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவருக்குப் படிக்கச் சொல்லிக் கொடுத்து… அவருக்கு அமெரிக்க ஜனாதிபதியாக ஆகக்கூடிய தகுதியை ஏற்படுத்தினதே அவருடைய மனைவி தானே..!”

“அப்படியா?”

“மோட்டார் மன்னர் யென்றி போர்டு தெரியுமில்லே, அவரு தன்னுடைய ஆராய்ச்சியிலே தோல்வி கண்டு வந்தப்போ பக்கத்துலே இருந்தவங்கள்லாம் அவரைப் பைத்தியம்ன்னு கேலி பண்ணாங்க!”

“‌அய்யோ பாவம்!”

“அந்த சமயத்துலே அவரு மனைவி தான் அவருக்கு உற்சாகம் ஊட்டினாங்க… மனசு சோர்ந்து போயி்டாதீங்க… நீங்க நிச்சயம் வெற்றி பெறுவீங்க… அதுக்கான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு… அப்படின்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க. அதனாலேதான் அவரு கடைசியிலே மோட்டார் காரைக் கண்டுபிடிச்சார்..!”

“பார்த்தீங்களா? ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள்-ன்னு சொல்றது எந்த அளவுக்குச் சரியா இருக்கு பாருங்க!”
“சரி… இப்போ நீங்க அடைஞ்ச வெற்றி என்ன?”

“அருமையா ஒரு நாவல் எழுதி முடிச்சிருக்கேன் சார்..!”

“இதுக்கு உங்க மனைவி ரொம்ப உதவி பண்ணாங்களா..?”
“ஆமாங்க”

“எப்படி?”
---------------------
“அதை நான் எழுதி முடிக்கிறவரைக்கும் அவ தன்னுடைய அம்மா வீட்டுக்குப் போயிருந்தாசார் !”
----------------------

ப.பி-------நன்றி : தென்கச்சி கோ. சுவாமிநாதன்

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (17-Nov-15, 7:15 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 404

சிறந்த நகைச்சுவைகள்

மேலே