சுதுமலையில் சூரன் போர்

சுதுமலையில் சூரன்போர்!

சுதுமலைப் பக்கமெல்லாம் வெள்ளம்
என்றாலும் விடுவானோ வேலன்
நானென்ற அகங்காரம் எனதென்ற மமகாரம்
ஆணவம் கன்மம் மாயை
அடியோடு ஒழித்திட நினைத்தான்
ஞானவேல்கொண்டு வந்தான்
சண்டைக்குப் பேர்போன வேலன்
சுதுமலைப் பக்கமெல்லாம் வெள்ளம்
அந்த வெள்ளத்தில் நடந்ததாம்
சூரன்போர் சண்டை
அந்தச் சண்டையில் பிளந்ததாம்
சூரபத்மன் மண்டை!

பொன் அருள் – 17/11/2015.

எழுதியவர் : பொன் அருள் (17-Nov-15, 9:39 pm)
பார்வை : 135

மேலே