மழையே - நீயும் ஒரு தீவிரவாதி
வாரி வாரித் தரும் மாரி
வரம்பு மீறி பெய்வதனால்
வாழ்க்கை வழக்கம் மாறி போனதடா
தரைமேல் தண்ணீர்
தடம் புரண்டு தாவுவதால்
தலைநகரம் தள்ளாட்டம் காணுதடா
சினங் கொண்ட மழைமேகம்
சீறி வீசும் மழைத்துளிகள்
ஏரித் தாண்டிச் சேரி வரை
ஒடுதடா
ஓடி ஓடி இன்னும் வேறு என்ன தேடடுதடா???
பறித்துப் போன உயிர் உடைமை
போதாதா ?
பலர் கண்ட துயர் ஏனோ தீராதா !!
தீவிரவாதம் தீரா வியாதி
உயிர் எடுத்துச் செல்வதனால்
மழையே - நீயும் ஒரு தீவிரவாதி !!
- நிரஞ்சன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
