காத்திருக்கிறேன்-4
என்னவளே !
அனுதினம்
காத்திருந்து -உன்
முகம் கண்டவுடன்
உள்ளத்தில் வரும்
ஒட்டு மொத்த மகிழ்ச்சியை......
ஒருதினம்
காணாதபோது
இதயத்தை அரித்துக்
கொண்டு போகிறது......
இருப்பினும் காத்திருக்கிறேன்.....
அவ்வலியினை என்
இதயம் தாங்க -ஒரு
வரம் கொடுப்பாய் என..........
-தஞ்சை குணா