கசங்கிய காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
என் மேசையை சுற்றி
இரைந்தும் கிழிந்தும்
களைந்தும் கசங்கியும்
கிடக்கும் காகிதங்களும்
அதில் ....
எழுதியும் அடித்தும்
தோய்ந்தும் காய்ந்துமிருக்கும்
பேனா மையும்
உணர்த்த முடியா காதலை
இந்த ஒற்றைக் கவிதைதானா
உணர்த்திவிடபோகிறது?