சாதனை

படுக்கையில பாத்ரூம்
போறதெல்லாம் நிறுத்திட்டேன்ல
கட்டைவிரல் சப்புறதையும்
சத்தியமா குறைச்சுட்டேன்ல
ஸ்ட்ரா வச்ச டம்ளரையும்
தம்பிக்கிட்ட கொடுத்துட்டேன்ல
நாலு சக்கர சைக்கிளையும்
ரெண்டாக மாத்திட்டேன்ல
அப்பா ஸ்கூட்டிலயே நான்
முன்னாடி உக்காருரதில்ல
தெரு கிரிக்கெட்ல கூட இப்ப நான் உப்புக்கு சப்பாணி இல்ல
பேணா ரப்பரெல்லாம்
நானிப்ப தொலைக்கிறதில்ல
பக்கத்து வீட்டு பாபுவவிட
இப்ப நான் ஹயிட்டு தெரியும்ல
இந்த தடவையாவது
எனக்கு முழு டிக்கெட் எடுமா
-மலரும் நினைவுகளுடன் சுஜித்

எழுதியவர் : சுஜித் (19-Nov-15, 3:43 pm)
சேர்த்தது : சுஜித்
பார்வை : 218

மேலே