அணையாத அவளம்~அர்ஷத்
கானல் நீர்
தாகத்தை
தீர்த்தாலும்
புலிகள்
மறந்து
புல்லை
புசித்தாலும்
காளை
மாடுகள்
கன்றை
ஈன்றாலும்
களவுகள்
எல்லாம்
களவு
போனாலும்
கர்நாடகா
காவிரியை
தடுக்காமல்
விட்டாலும்
கற்பழிக்கப்பட்ட
சிறுமியின்
செய்தியும்
பாலஸ்த்தீன்
சிறுவன்
சிதைந்த
புகைப்படமும்
சிரியா
நாட்டின்
சொல்லா
துயரமும்
தலைப்பு
செய்திகளாகவே
இருக்கும்...