மழை

பூ மகளின் அலங்கோலம் பொங்கிவிட்டாள் வான மங்கை தென்றலாக வந்து நின்று புயலாகி ஆடிவிட்டாள் தன் வெள்ளி மேனி வியர்வையிலே பூமகளை நீராட்டி பசுமைச்சேலை பட்டுடுத்தி வளம் என்ற மலரை பூ மகளின் கூந்தலிலே சூடிநின்றாள் ஊரெல்லாம் பாடிவந்து கடலரசன் காதலிடம் தஞ்சமானாள் வான மங்கை என்னும் மழையரசி

எழுதியவர் : செல்வம் சௌம்யா (21-Nov-15, 7:47 pm)
Tanglish : mazhai
பார்வை : 150

மேலே