மன்னித்தருள் மழையே
அடியே மழைக்கண்ணே
-- அழகாய்ச் சிரிக்கின்றாய்
இடியார் கட்டியத்தில்
-- இறங்கி வருகின்றாய்
மடிதான் மண்தரவே
-- மழலை தவழுகிறாய்
மிடியோர் பிணிமாற
-- மிதமாய்க் குளிருகிறாய் !
நனிதான் சிறந்துயர
-- நன்றாய் அருளுகிறாய்
மனிதம் உன்னருமை
-- மறந்த கதைமறப்பாய்
இனிதம் பொருப்பறிந்து
-- இருக்கக் குளம்தருவார்
இனிதாய் இவருடனே
-- இருப்பாய் நிரந்தரமாய் !
-----------------------------------
வாய்ப்பாடு: மா காய்
-----------------------------------
...மீ.மணிகண்டன்