ஹைக்கூக்கள்

குடைக்குள் குழந்தை .
நனைகிறாள் அன்னை .
----- தாய்ப்பாசம்
கொட்டும் மழையில் குடைக்குள்
குழந்தை . திட்டுகிறாள் தாய் மழையை .
------- பாசம் .
அடைமழையிலோ அன்னை .
குடைக்குள்ளோ பிள்ளை .
------ தாயுள்ளம்
தரையெங்கும் தண்ணீர் தவிக்கும்
தாய்மனமோ கண்ணீர் பிள்ளைக்காக
------- அன்னையுள்ளம்