அம்மாடி என் மகனே ...
![](https://eluthu.com/images/loading.gif)
வாத்தியாரு வீடு பயைன் சொன்னாரு
நீ நல்லா தான் படிகிறேனு ..
கண்ணு நிலை குத்தி போச்சி
உன்ன உன் ஆத்தா நான் எப்படி
படிக்க வைக்க போறேன்னு ..
கிழிஞ்ச சேல மாத்திகனு
கிளம்பும் போதெல்லாம்
போலம்ப்ரறாரு போக்கத்த அவரு
உசிரெல்லாம் உன்மேல இருக்கும் போது
எனக்கு அது மேல ஏது விருப்பு
நாலு பேரு முன்னால
நல்ல படி வாழனும் என் நல்ல மகனே
உழக்கு கஞ்சி குடிச்சினாலும்
உன்னை நான் படிக்க வைக்கிறேன் ..
பருத்தி எடுத்து வித்திபுட்டு
பரிச்ச பீஸ் நானு கட்ட
பயல உன்ன நான் பார்க்க வந்தா
அம்மான்னு சொல்லாட்டாலும்
வேலை காரின்னு சொல்லிடாதே
அம்மாடி என் மகனே ...
ஊரு கெட்டு கிடக்கு ..
பொண்ணுங்க சிரிச்ச்சங்கனு ..
அவங்க பின்னாடி போய்விட்டா ..
உன் ஆத்தா உசிரு ...
பாதி ஆகி போகும்
உன் குடும்பம் ஒன்னும்
இல்லைன்னு ஆகி போகும் ...
நல்லவங்க நாலு பேரோட சேரு
நாடு உன்ன திரும்ப செய்ய பாரு
நாடு ராத்திரி கூட நல்லா தான்
யோசிச்சி பார்த்தேன்.. நீ படிச்சி புட்டு
பக்கத்துக்கு ரேசன் கடைக்கு வந்துட்டேன்ன
எனக்கு வரிசைல நிக்க வேண்டாம் பாரு ...
கோழி கூவிடிச்சி கொல்ல பக்கம்
போக நேரம் வந்திருச்சி
சீக்ரம் எந்திரிச்சி
விலக்கு வரும் பட்டணத்து
பஸ்- ஐ பிடிக்க வழியை பாரு..