தொலைந்து போகலாமா ம்ம்ம்ம்

முன்புபோல,,
இப்படியே இருந்துவிட்டால்தான் என்ன
எங்கோ இறக்கிவைக்க
நினைக்கும் காலப்பொதிகளை
பதின்ம வயது
கோக்கோமிட்டாய் விரும்பி ஒருவளின்
புனைவில் வரும்
அந்தநேர மெல்லியகாற்றிடத்தும்
அந்திவானில் பறக்கும்
கருத்த பறவைகளிடத்தும்
இப்படியே களைந்துவிட்டு போய்விடலாமே
அவைகள் கொடுத்த அத்தனையையும்
இந்த நிமிட சேமிப்பிற்குள்
அடைத்துவிட முடியாதபோதுதான்
அவளுடைய நிமிடங்களையும் களவாடுவேன் ம்ம்,,

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (23-Nov-15, 3:46 am)
பார்வை : 107

மேலே