வெட்கப் பரிணாமம்

பெயரைச் சொல்லி
அழைக்க வெட்கப்பட்டு
ஓடியிருந்தவள்....
பிறிதொரு நாளில்
கதவு சன்னல்களுக்குப்
பின்நின்று
வெட்கம் பழகியிருந்தாள்....
அடுத்த காலங்களில்
கைபிடிக்கக் கேட்டபோதும்...
முத்தமிட்டு
நிமிர்ந்த போதும்... சன்னமாக
இந்த வெட்கம்
இழையோடியபடியேதான்
இருந்தது...
இதோ.... மிகச்சமீபமாக
....... யூ... சொன்னதற்கு.....
யூ ஆர் சச் அன்......................
சொல்லியபடி... மீண்டும்
விளைந்தெழுந்து விடுகிறது....
எத்தனை பிரயத்தனங்களின்
போதும்
துரத்திவிட இயலாது
போயிருந்த..... அவ் வெட்கம்......!!!