அந்த சில நொடிகள்

வானம்..
உன் மன விசாலத்திற்கு முன்
சிறியதாகத்தான் ஆகி விட்டது ..
என்னை நீ ஏற்றுக் கொள்வதாக
முடிவெடுத்த அந்த நொடியில்!

கடல்..
உப்பு கரிப்பு இல்லா தண்ணீரை மட்டுமே
கொண்டதாக முற்றிலும் மாறி விட்டது..
நம்மிருவரின் பாதங்கள் இணையாய்
கடற்கரையில் பதிந்த அந்த நொடியில் !

பூமி..
சுழல்வதை ஏழெட்டு நிமிடங்கள்
நிறுத்தி கொண்டது..
நாம் கைகோர்த்து மேகங்களுக்கிடையில்
பறந்து சென்ற அந்த நொடியில் இருந்து !

நட்சத்திரங்கள்..
அத்தனையும் கண் சிமிட்டின ..
நீ என் கரம் கோர்த்து
கதைகள் பேசி நடந்த போது!

ஒரு நீர்க்குமிழி ..
டப்பென்று உடைந்து போனது ..
நீ என்னை ஒதுக்கி, மறந்து..
வேற்றூருக்கு புறப்பட்டு போனபோது !

எழுதியவர் : பாலகங்காதரன் (23-Nov-15, 9:52 am)
Tanglish : antha sila nodigal
பார்வை : 235

மேலே