இளைஞனே விழித்தெழு ..
இளைஞனே விழித்தெழு ..
ஆம் என்ன பார்க்கிறாய்
அரண் காக்க வேண்டிய நீ
அயர்ந்து தூங்கினால்
எதிரிகள் எல்லை மிதிப்பார்
கடு சினம் கொண்டு
கயவர்களை அளித்திடு
வலிய தோள் கொண்டு
வஞ்சகங்களை எதிர்த்திடு
நீ எட்டி மிதித்தால்
எதிரிகள் எழுந்திருக்க முடியாது
அடி பணிந்தால்
அல்லல்கள் உன்னை சூழும்
படிப்பினை கருவியாக்கி
திறனை கூராக்கி
அறிவினை ஆற்றலாய் கொண்டு
வாழ்க்கை போருக்கு புறப்படு
காதல் என்னும் காயத்தில்
காலை கட்டி கொள்ளாதே
உனக்கு பறந்து விரிந்த
உறவுகள் பசுமையாய் காத்துள்ளன
சொந்தங்கள் சொத்தில் பிரிந்து போகும்
நட்புகள் நாளடைவில் நலிந்து போகும்
உனக்கென ஒரு உளிதட்டு
அதில் உன்னை மட்டும்
ஒளியாய் செம்மை படுத்து
அம்மாவின் அன்புக்கு அடிபணிந்து
அப்பாவின் ஒலிகளுக்கு செவி சாய்ந்து
புறப்படு புன்முறுவலோடு
பொறுப்புகளை பொறுமையாய் தேடு
பொன்னும் பொருளும் உனதாக்கு
எளிய மனைவியை தனதாக்கு
சுத்துகிண்டஉலகம் நின்னாலும்
சுறாவளி வந்தாலும்
உன்னை ஒன்றும் செய்யாது...
கணினி உலகம் இது
கண்ணியமாய் நடந்து கொள்
உலகம் ஒருநாள் உன்னை பார்க்கும்
அப்போது வெளிப்பாடு முழு மனிதனாய்..