பெத்தவளே உன் பெருமை

எத்தனையோ ?.........
கவிதைகளை
நித்தமும்..நான்
எழுதிருக்கேன்
பெத்தவளே ........உன்
பெருமை ஒரு
பாட்டிலும் ...நான்
சொன்னதில்ல ...

கர்ப்பத்தில் ...
எனைத்தாங்கி கஷ்டத்தை
அடஞ்சவளே ...
சொப்பனத்தில் கூட
உன்பெரும
சொல்லனுன்னு
நெனச்சதில்ல

ஓலைகுடிசையில .......
சேலையில தூளிகட்டி
அதிகலையில ..உன்
தாலாட்டு ....என்
மூலையில ஒலிக்குதம்மா

கந்தல் துணியுடுத்தி ..
கஞ்சியதான்...நீ குடிச்சி
பொங்கி வச்ச சோத்த போட்டு
என்ன திங்கவச்சி பார்த்தவளே ...
காய்ச்சலோடு .....
நான் படுத்தா என்னக்கு
கஞ்சி வச்சி கொடுத்தவள

குடிகார அப்பனுக்கு ....உன்
வாழ்க்கை பலிகடா
ஆனதம்மா !
சதிகார தகப்பனுக்கு ..உன்
வாழ்க்கை சீரழிந்து
போனதம்மா ...

கண்ணாலம்...
காட்சிசெஞ்சி ..என்ன ?
முன்ன விட்டு பார்த்தவள
என்னால..உன் பெரும
சொல்லாம போச்சுதம்மா
தாரமாக ..வந்தவளோ
ஒன்ன ஓரங்கட்ட
பாக்குறாம்மா

நான் யாருபக்கம்
பேசுவது ..எனக்கேதும்
தோனலாம்மா
தாரம் பக்கம் பேசுனாக்க
தாயுமாவ கோச்சிக்குவா
தாய் பக்கம் பேசுனாக்க
தரமாவ கோச்சிக்குவா

இருதல கொள்ளிபோல
இருக்குறம்மா ..உன்
மகனோ?...தவறு வந்து
நேர்ந்திடுன்னு ...
தவிக்கிறம்மா...உன்
மகனோ ?

தன்மகன் .....
வாழ்க்கை ..எங்கே ?
தவறுதலா போயிடுன்னு
தனி குடுத்தனம்
போகச்சொல்லி ..எனக்கு
தைரியம் கொடுத்தவளே
காத தூரம் ...
நானிருந்தும் ..உனக்கு
கடுதாசி போட்டிடுவேன்
என் கண்ணீர மையக்கி
என் கவலையெல்லாம்
எழுதிடுவேன் ......

நோய் வந்து ...
நீ படுத்தா ..ஒரு
நாயி வந்து பார்த்ததில்ல
பாவி மகன் ..நான் உனக்கு
பணிவிடை செஞ்சதில்ல
(தொடரும் )

எழுதியவர் : இரா .மாயா (23-Nov-15, 8:44 pm)
பார்வை : 158

மேலே