என்ன பிரச்சனை
- இந்தா கமலா மாம்பழம் அப்பா என்ன விலை
- யாரோட பேசிண்டிருந்தீங்க
- யார் ஓ நம்ப பங்கஜத் தோடு தான்
- போச்சு அவள் இங்கு வராம போகமாட்டாள்
- வந்தா என்ன
- நீங்க தானே சொன்னீங்க மாம்பழம் விலை ஜாஸ்த்தின்னு அவளுக்கு ஏன் தரணும்
- ஒரு துண்டு தந்தா போச்சு
- ஒண்னும் வேண்டாம் முதல்லே பிரீட்ஜ்லே கீழே போட்டு மூடுங்க அவ போனப்புரம் சாப்பிடலாம்
இரண்டு நாளைக்கு பின் எடுக்கும் போது அழுகி விட்டது
- ஐயய்யோ அழுகிடுச்சி நான் அன்னிக்கே சாப்படலாம்னு சொன்னால் நீ கேக்கலை ஒரு துண்டு அவளுக்கு கொடுத்தாலும் மீதிய நாம் சாப்பிட்டிருக்கலாம்
- இப்போ உங்களூக்கு என்ன பிரச்சனை
- பழம் அழுகிடுச்சே அதுதான்
- அதுவா இல்லை அவளுக்கு கொடுக்கலைங்கரதா
- அப்பாடி எனக்கு பழமே வேண்டாம்மா