இது எனது உன்மை வாழ்க்கை, பாகம் ஒன்று
ஏன் பிறந்தேன் நான் இந்த உலகில், ஏற்கனவே எனக்கு முன்னால் ஒருவனை பெற்று விட்டீர்களே, பிறகு யாரை கேட்டு என்னை பெற்றீர்,நாம் இருவர் நமக்கொருவர் என்றிருக்க வேண்டியது தானே என்று எனது தாய் தந்தையரை பார்த்து கேட்க வேண்டும் என்று தான் பார்க்கிறேன்,
ஆனால் நான் கேட்பதற்கு முன்னாள், நீ ஏன் பிறந்தாயோ, பூமிக்கு பாரம், சோத்துக்கு தண்டம் நீ பிறப்பதற்கு பிறக்காமலே இருந்திருக்கலாம், கொஞ்சமும் கூட அறிவே இல்லையா என்று என்னை கேட்டு விடுகின்றனர், ஒரு நாளும் ஒரு நிமிடம் கூட இந்த சொல்லை நான் கேட்காமல் இருந்ததே இல்லை எனது தாய் தந்தை சகோகரன் மற்றும் உறவினர்கள் உட்பட அனைவரிடமும் நாளும் திட்டுக்கள் பல வாங்கி கொண்டு தான் வாழ்கின்றேன் வேதனையோடு,
இது தான் என் வாழ்க்கை, வாருங்கள் அப்படி என் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம் அடுத்த பாகத்தில்