அம்மா சுட்ட ஆப்பம்
ஆப்பம் நல்ல ஆப்பம்
அம்மா சுட்ட ஆப்பம்
மைதா மாவும் அரிசிமாவும்
சர்க்கரையும் ஏலமும் சேர்த்தே;
தேங்காய்ப் பூவும் கலந்து
பாங்காக மாவும் பிசைந்து
தூய எண்ணெயில் செய்தது
தூக்கலாய் சுவையும் உள்ளது!
அம்மா வுக்கு இரண்டு
அப்பா வுக்கு இரண்டு
பாப்பா வுக்கு இரண்டு
பிட்டுப் பிட்டுத் தின்னலாம்!