மழையே இது நாயமா
இயற்கை இங்கு வரம் அளித்து
ஈரா காற்றில் மழைச்சுரம் அமைத்து
இரவுபகலாய் பொழிந்த மழையே
இடர்தரும் புயலாய் மாறியது ஏனோ?
தண்ணீர் பஞ்சம் தீர்க்க வந்தாயா
தண்டிக்கும் முறையில் மழையை தந்தாயா
இரண்டில் எதுவாக நீ வந்தாயோ
இன்று சிறப்பாக நகரத்தை நீ சிதைத்தாயோ
வீடு எங்கும் தண்ணீர் குளம்
வீதி எங்கும் படகில் வளம்
வீணாக போனதே தினம்
விலையில்லா மனித சுகம்
பால் விலை ஏறி போக
படும்பாடாய் படுரோ நாங்க
நீங்க கொஞ்சம் ஓய்வுக்கு போங்க
வத்தட்டும் வீதி ஓடை தாங்க
விட்டுவிட்டு நீ வந்தா பதற்றமில்ல
விடாமா நீ வந்தா சீற்றம்யெல்ல
சிதறி போகட்டும் நீ தந்த தொல்ல
சீக்கிரம் மாறட்டும் பழையபடி நடந்துசெல்ல
மனமில்லா மழையே மறைந்து போ
மலரும் அழுகிறது தொலைந்து போ
குணமில்லா மழையே குறைந்து போ
குலமே அழுகிறது குலைந்து போ
அறமொடு நீ பொழிவாயா அழகு மழையே
அரக்க தனத்தை விடுவாயா அழகு மழையே
ஆனந்தம் தந்து செல்வாயா அழகு மழையே
அகிலம் வாழட்டும் நனைந்து அழகாய் இனியே