உன்னை பார்த்து விட்டேன்
நீ ஏற
நான் இறங்க
நடுவே என் உயிர் நின்று போக
எனை நீ ஏந்த
உனை நான் பார்க்க
எனை நீ உச்சிதனை முகர...
உனை நான் ஸ்பரிசிக்க ...
அவரோகணம் ஆகிறது என் உடல்...
உன்னில் கரைந்ததால்...
ஆரோகணம் ஆகிறது என் உயிர்...
உயிரில் உயிர் விடுவதால்...