காதல்
கள்ள காதல்
காலையில் முடிந்தது
செல்லக் காதல்
சிணுங்கலில் முடிந்தது
வல்ல காதல்
வாழ்வில் இனித்தது
வாழாத காதல்
சாவில் கனிந்தது
சேர்ந்த காதல்
வாழ்ந்து நிறைந்தது
சேராத காதல்
பாரம் நிறைந்தது
காவியக்காதல்
ஓவியம் ஆனது
ஓவியக்காதல்
காவியம் ஆனது
சொல்லாத காதல்
சோகத்தில் நலிந்தது
பொல்லாத காதல்
புவனத்தில் மலிந்தது
சில்லறைக் காதல்
சேற்றில் புதைந்தது
கல்லறைக் காதல்
காணாமல் சிதைந்தது