ஆசானை வணங்குவோம் ---- கலித்தாழிசை
ஆசிகள் தந்திட்ட ஆசான் பெருமைகள்
கூசிட வேண்டாம் குறித்தே உரைக்கவும்
தேசுடை நாடாய்த் தெளிவுறச் செய்தவர் .
வீசுறும் தத்துவம் விண்ணில் படைத்தவர் .
மாசுகள் நீக்கிட மண்ணை வணங்குவோம் .
மாற்றங்கள் காண்பீர் மனிதம் வணங்குவோம் .