இன்னும் ஒரு காதல் வழக்கு
நீதி மன்றங்கள்
நிமிர்ந்து நிற்கின்றன
நீதிதான்
தலைகுனிந்து ..!
இளவரசி
என்ன ராஜாங்கம்
நடத்துகிறாய் ,,
உனது சபையிலும்
நீதி இல்லையோ?
இந்தக்
காதல் போராளி
ஒரு
தீவிரவாதி அல்லவா?
தீவிரவாதிகளை
விட்டுவைக்கலாமா?
வழக்கை விசாரி
ராஜகுமாரியெ
இழுத்து நிறுத்து
இதயக் கூண்டில்
என்னை
ஒரு
ஆயுள் கைதியாய்
அடைத்து வையேன் (1991)
('காதலின் பொன்வீதியில் ' நூலிலிருந்து )