கற்பழிப்பு

சில்லறை வானில்
சிறகடிக்கத் தெரியாத
நீ
என் நம்பிக்கை நிலவை
ஏன்
நாசமாக்கினாய்

கடற்கரைத் தென்றலின்
சுகந்தம் புரியாத
நீ
என் காதல் நினைவுகளை
ஏன்
கசக்கிப் பிழிந்தாய்

ஓலைக் குடிசையின்
ஒத்தடம் சுவைக்காத
நீ
என் மூளை நாண்களை
ஏன்
பிடுங்கி எறிந்தாய்

சலசலக்கும் ஆற்றின்
சங்கீதம் உணராத
நீ
என் இதய ஏட்டை
ஏன்
கிழித்துப் போட்டாய்

பச்சை வயலின்
ஸ்பரிசம் காணாத
நீ
என் குழந்தை மனசை
ஏன்
அறுத்து எறிந்தாய்

நீ
போ. ....
உன்னால்
ஒன்றை மட்டும் தான்
செய்ய முடியும் ....
அது
இதயத்தின் கற்பழிப்பு

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (28-Nov-15, 10:15 pm)
Tanglish : karpazhippu
பார்வை : 371

மேலே