கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்...
மெள்ள.. மெள்ள கதிரவனும்
மேலெழுந்த நேரம்
இனிய காலை பொழுதினிலே
ஆ லய தரிசனம்..!!
சங்கொலியும் மத்தளங்கள்
நாதஸ்வரங்கள்
சேர்ந்திசைத்த ஊர்வலத்தில்
தீர்த்த கலசங்கள்..!!
உச்சிகலச கோபுரத்தில்
கும்பாபிஷேகங்கள்
ஓம் சக்தி... சக்தி...சக்தியென்ற
பக்தி கோஷங்கள்...!!
வெண் குடையின் நிழலினிலே
சக்தியின் காட்சி
அகிலமுமே கொடையினடி
அவளின் ஆட்சி..!!
மேகமற்ற மழையினிலே
மக்கள் வெள்ளந்தான்
அங்காள பரமேஸ்வரியின்
அருளை கொள்ளத்தான்..!!
தீர்ந்துவிடும் சாபமெல்லாம்
அவளின் பார்வையில்
சாய்ந்துவிடும் துயரமெல்லாம்
அம்மன் கருணையில்..!!
(குறிப்பு: இன்று எங்கள் ஊர் அங்காள பரமேஸ்வரி
ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடவுள் தரிசனத்தின் போது மனதில் உதித்த கவிதை )