இன்னொரு விடுதலைபோர்

ஓ....இந்திய தாயே !
இன்னொரு .....
விடுதலை போருக்கு
தயாராகு
என் இந்திய தாயிக்கு
இருபத்து ஒன்பது
மழலைகளாம்

அதில் .......
இருபத்துமூன்று
சுகப்பிரசவம்
ஆறு அறுவைசிகிச்சை
தாயே .....நீ மட்டும்
கருத்தடை மாத்திரை
எடுத்திருந்தால் ....
இந்தியா?..என்பது
ஒரே தேசமாய்
இருந்திருக்கும் .

நீயும் ...
பெண்தானே...
உனக்கு மட்டும்
ஆசை இருக்காதா?..என்ன?
ஒன்று பெற்றால்
ஒளிமயம் ....
இரன்று பெற்றால்
இன்பமயம் ....என்று
எங்களுக்கு சொல்லிவிட்டு
நீ..மட்டும்
இத்தனை குழந்தைகளை
எப்படி பெற்றடுத்தாய்

அதனால்தான் ....உன்
தலைப்பிள்ளை காஷ்மீர்
தனிநாடு கேட்கிறான் !..உன்
நடுப்பிள்ளை.....
உத்திரபிரதேசம் ...உன்னை
உதாசினப்படுத்துகிறான் ...
உன் ..கடைசிப்பிள்ளை
தமிழன் மட்டும் ...
தனிமை பட்டுகிடக்கிறான்

இங்கே ....
பாலாறு பிரச்சனை
அங்கே ......
முல்லை பெரியாறு
பிரச்சனை
பக்கத்தில் .....
காவேரி பிரச்சனை
இப்படி ..
நீரை கேட்கவே
தாயே ...உன்னிடம்
நாங்கள் ......
நீதி கேட்க
வேண்டிஇருக்கிறது!..

எழுதியவர் : இரா .மாயா (29-Nov-15, 5:15 pm)
பார்வை : 62

மேலே