ஈசல்
உதிர்ந்த
சிறகில் இருந்தது
தன்னை உதிர்த்துவிட்டு
ஊர்ந்து போய்விட்டதே
என்ற வலி
அதுவோ
வெளியின் குரூரத்தை
உணர்ந்தபடி
தன் முதுகிற்கான
சிறகைத்தேடியலைந்தது
சிந்திவிட்ட
சிறகுகளை
ஊரித்திரியும்
உடல்களோடு
இணைக்க யாரிடமும்
இல்லை மாயவேர்கள்
உள்ளிருந்ததே
நிம்மதி என்று உணரும்போது
உயிர்போயிருந்தது.
காற்றுக்காடிய அதன்
கண்ணாடிச்சிறகில்
இருந்தது அது
அடையவிரும்பிய
வானம்.
- நிலாகண்ணன்