பொய்யின் புல்லாங்குழல்
![](https://eluthu.com/images/loading.gif)
இது
பொய்யின் புல்லாங்குழல்
உணர்வுக் காற்றினில் பெருகி வரும்
இதில் ராகங்கள் கீதங்கள்
இதன் பெயர் கவிதை !
இதன் விரிந்த ஆலாபனை
காவியங்கள் !
காற்றில் மிதந்து வரும் குழலோசை போல்
நெஞ்சில் தாளமிடும் இதன் இன்னிசை !
வாசிக்கும் போது குழல் இனிமை
வாசிக்கும் போதுதான் கவிதையும் இனிமை !
~~~கல்பனா பாரதி~~~