ஆனந்த பைரவியே --- சக்கரைவாசன்
ஆனந்த பைரவியே
**********************************************
சந்திர சூரியரை முகத்திரு கண்களாய் தான்கொண்ட தாயவளே
என்தைசிவன் உடல்தன்னில் இடமதைப் பங்கிட்ட ஈடில்லா ஈஸ்வரியே
மந்திரத்தில் நீ அவனாகி சுந்தரத்தே அவன் நீயான ஆனந்தபைரவியே -- உன்
மித்திரன் இவனுக்கும் நன்மைகள் நேர்ந்திட அருள்மழை பொழிந்திடுவாய் !