பாவை நீ காவலே --- சக்கரைவாசன்
பாவை நீ காவலே
*********************************
பாலோடு கந்தத்தில் நீராட்டி வைத்தார்க்கு பாவை நீ காவலில்லையோ
மாலோடு அரன்அயன் சேர்ந்தே துதித்திடும் ஆக்கத்தின் மகாசக்தியே
வாளோடு சூலத்தை ஆயுதமாய்க் கொண்டு சிம்மத்தில் வருபவளே -- உன்
தாளோடு ஒன்றிய இவனை நீ காப்பாற்று என்னருமைத் தாயவளே !