புன்னகை மலரே ---- சக்கரைவாசன்
புன்னகை மலரே
***********************************
புன்னகை உதிர்த்திடும் மலர்ந்த முகங்கொண்ட புவனத்தின் ஈஸ்வரியே
பொன்நகை சேர்ந்திட முன்னகம் பின்னகம் தெளிவாக்கும் சுந்தரியே
உன்னகக் காதலன் உன்னையே சுற்றிட பனிமலை நேர்ந்தவனோ -- தன்
அன்னையாய் உனையெண்ணி சுற்றியே வந்துறும் இவனுக்கும் அருள்கூட்டுவாய் !