எழுத்தின் நண்பர்களே

இயற்கையின்
சீற்றத்தில்
இன்னல்கள்
இவ்வுலகில் ஏராளம்.....
மூழ்கும் சென்னை
என்று செய்திகள்
சொல்கிறது....ஏனோ
மனம்தான்
நோகிறது.....
ஆறுதலும் ஆதரவும்
சொல்லி
அவதானம் தான்
பிரதானம்.....நண்பரே
தோழரே .....நலமுடன்
நீங்கள் வாழ
நாங்கள்
வேண்டுகிறோம்
எல்லோர்க்கும்
பொதுவான கடவுளை.....!
என்னைக்
கலங்கடித்த
சென்னை மழை
வெள்ளம்.....நலம்
கேட்குதே
என் உள்ளம்.....!
நீங்கள்
மீண்டு வர
மீண்டும் மீண்டும்
வேண்டுகிறேன்
ஆண்டவனை.....!!
இது கடல் தந்த
சுனாமி
அல்ல....வானம்
கொட்டிய
சுனாமி.....முடிந்தவரை
உதவு.....உதவிடு.....!!