குட்டீஸே

ஏ! குட்டீஸே... குட்டீஸே...
குறும்புத்தனம் செய்யும் குட்டீஸே!
கூட்டமாய் இங்கே ஓடிவாருங்கள்...
கோபுரமாய் உயர்ந்து நில்லுங்கள்! (குட்டீஸே...)

தாய் தந்தையைத் தினமும் போற்றுங்கள்...
தாய்மொழியோடு பிறமொழியையும் பயிலுங்கள்!
'தான்' என்பதை விட்டுவிடுங்கள்...
தரணி போற்ற பாடுபடுங்கள்! (குட்டீஸே...)

பெரியோர் சொல்வதைக் கேளுங்கள்...
பிடிவாதத்தை உதறித் தள்ளுங்கள்!
பிரச்சினை எதுவானாலும் சொல்லுங்கள்...
பிறர்மனம் நோகாதபடி வாழுங்கள்! (குட்டீஸே...)

காய்கறியை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்...
காசு பணத்தைச் சேமித்துவையுங்கள்!
கடத்திச் சென்றால் குரல்கொடுங்கள்...
கடமை உணர்வோடு செயல்படுங்கள்! (குட்டீஸே...)

எழுதியவர் : எடையூர் ஜெ.பிரகாஷ் (5-Dec-15, 2:43 pm)
பார்வை : 56

மேலே